×

சங்கரன்கோவில்  கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சங்கரன்கோவில்,மே 7: சங்கரன்கோவில்  கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024ம் ஆண்டில் 135 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். சிவநந்தினி 590/600 மதிப்பெண்கள் பெற்று தாலுகா அளவில் முதல் இடத்தையும், மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மாணவி ஐஸ்வர்யா 2ம் இடத்தையும், 572 மதிப்பெண்கள் பெற்று மாணவி அபிதீப்தி 3ம் இடத்தையும் பிடித்தனர். மேலும் இப்பள்ளியில் 500க்கு மேல் 32 பேரும், 550க்கு மேல் 12 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், ஆசிரியர்களையும் பள்ளி செயலாளர் ராஜேஸ்கண்ணா, முதல்வர் பழனிச்செல்வம் ஆகியோர் பாராட்டினர்.

The post சங்கரன்கோவில்  கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Gomati Ambal Matriculation School ,Sankaranko ,Sankarankoil ,Gomati Ambal Matric Higher Secondary School ,Shivanandini ,Dinakaran ,
× RELATED இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்